உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / போலீஸ் ஸ்டேஷனில் திபுதிபுவென புகுந்த காதல் ஜோடிகள்; தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ்

போலீஸ் ஸ்டேஷனில் திபுதிபுவென புகுந்த காதல் ஜோடிகள்; தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ்

போலீஸ் ஸ்டேஷனில் திபுதிபுவென புகுந்த காதல் ஜோடிகள்; தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ் / Romantic Couples seek refuge at Police Station / Attur / Salem சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பமுண்டி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் சூர்யா வயது 19. கல்லூரி மாணவரான இவரும், 19 வயது இளம் பெண் ஒருவரும் ரொம்பவே டீப்பா லவ் பண்ணாங்க. வழக்கம் போல பெத்தவங்க காதலுக்கு பச்சைக்கொடி காட்டாம, கருப்புக்கொடி காட்டி கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ‛போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு என எள்ளி நகையாடிய காதல் ஜோடி, வீட்டவிட்டு ஓடிப்போய் கண்ணாலம் கட்டிக்க முடிவு செஞ்சாங்க. ‛நேத்து ராத்திரி யம்மா; துாக்கம் போச்சுடி யம்மா என அவரவர் வீட்ல விடிய விடிய கண் முழிச்சி காத்திருந்த காதல் ஜோடி விடிச்சந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து நேரா முத்துமல முருகன் கோயிலுக்கு போனாங்க. அங்கு முருகன் சாமிகிட்ட சரண்டர் ஆனாங்க. அங்க காதல் ஜோடிக்கு சிம்பிளா டும்டும்டும் நடந்துச்சு. தாலி கட்டின கையோட ஜோடிங்க ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்குள்ள திடுதிப்புன்னு புகுந்தாங்க. என்ன, ஏதுன்னு போலீஸ் விசாரணை செய்ய முற்பட்டாங்க. அப்போ அம்மா, தாயீ எங்கள காப்பாத்துங்கன்னு பெண் போலீஸ்காரங்க கால்ல ஜோடிங்க தொப்புன்னு விழுந்தாங்க. breath: அதேபோல கள்ளக்குறிச்சி சிபிராஜ். புதுக்கோட்டை தெய்வானை செல்வி. இவங்க ரெண்டு பேரும் நகமும் சதையுமா ரொம்பவே நெருக்கமா காதலிச்சாங்க. வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிச்சு ரெண்டு தரப்பு பெத்தவங்க காதலுக்கு கட்டையை போட்டாங்க. ‛போங்கடா சொட்டத்தலைங்களா என தங்களின் தந்தைமார்களை திட்டித் தீர்த்த கையோட பெத்தவங்க எதிர்ப்ப மீறி தடபுடலா கல்யாணம் முடிக்கா விட்டாலும் கூட ஒரு கோயில்ல சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நேரா ஆத்துார் மகளிர் ஸ்டேஷன்ல தஞ்சம் புகுந்தாங்க. இதே பாணியில் மற்றொரு காதல் ஜோடி ஆத்துார் சிட்டி போலீஸ்கிட்ட சரணடஞ்சாங்க. ‛இதென்னடா வம்பாப்போச்சு; உள்ள வேலையையே பாக்க முடியல; இதுவேறயான்னு நெனச்ச போலீஸ்காரங்களுக்கு தலை கிர்ர்ன்னு சுத்துச்சு. ‛சரித்தான் விடு என தங்களுக்குள் சமாதானம் அடஞ்ச போலீஸ்காரங்க மூன்று ஜோடி பெத்தவங்கள ஸ்டேஷனுக்கு வரவழைச்சாங்க. அவங்கிட்ட, ‛இங்க பாருங்க அவங்க மைனார் இல்ல; இப்போ மேஜர். திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சா. உங்க மேல கேஸ் போட வேண்டியிருக்கும். உங்கள நம்பி வந்த பயபுள்ளைங்கள கண்ணும் கருத்துமா பாத்துக்கணும். என்ன புரியுதா, எதாவது எடக்கு முடுக்கு வம்பு பண்ணினீங்கன்னு தெரிஞ்சா, முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே துாக்கிப் போட்டுருவோம்ன்னு, போலீஸ் எச்சரிச்சக்க செஞ்சு புதுமண காதல் ஜோடிங்கள அவங்கவங்க பேரன்ட்ஸ்கிட்ட ஒப்படச்சாங்க. அப்போது ஸ்டேஷன் வெளியில ஒரு திருமண விழாவில் ஒலிபரப்பான, ‛கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா; இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா. தாலியத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா; இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா, எனும் சினிமா பாடல் படி காதல் கிளிகளுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.

ஜூலை 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை