உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / வசிஷ்டர் வணங்கிய சிவனுக்கு சிறப்பு அன்னாபிஷேகம் | Salem | Special Annabishekam for Lord Shiva

வசிஷ்டர் வணங்கிய சிவனுக்கு சிறப்பு அன்னாபிஷேகம் | Salem | Special Annabishekam for Lord Shiva

ஆத்தூர் கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு வசிஷ்ட முனிவர் வழிபட்ட கைலாசநாதருக்கு அண்ணாபிேஷகம் நடைபெற்றது. 50 கிலோ அரிசியில் சமைத்த சாதம், தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், திராட்சை, கேரட், அன்னாசி, பச்சை பட்டாணி உள்ளிட்ட 27 வகை காய்கறி, பழங்களுடன் கைலாசநாதருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் செய்தனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது அன்னலிங்கம் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள் நீ்ங்கிட வேண்டி ஆயிரக்கணக்காண பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ