உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / சொந்த கிராமத்தில் பொதுமக்கள் தடபுடல் வரவேற்பு | sports | selam

சொந்த கிராமத்தில் பொதுமக்கள் தடபுடல் வரவேற்பு | sports | selam

சேலம் மாவட்டம் கல்பனூர் ஆதித்த கரிகாலன் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவிகள் கோலாலம்பூரில் நடைபெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டிகள் இன்டர்நேஷனல் சிட்டி பான்சா ஸ்டேடியத்தில் கடந்த ஜுன் 28 முதல் 30 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 59 மாணவ, மாணவிகள் 10, 14, 19 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்றனர். இப்போட்டிகளில் இந்தியா மாணவ, மாணவிகள் 25 தங்கம், 14 சில்வர், 20 வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். ஆத்தூர் ஆதித்யா கரிகாலன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பங்கேற்ற ராகுல், சவுந்தர்யா, சினேகா, மோனிஷ், கிஷோர், கிருத்திக் ஆகியோர் ஒரு தங்கம், 5 வெண்கலம் வென்றனர். சொந்த ஊர் திரும்பிய மாணவர்களை ஆத்தூர் கல்பகனூர் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ