உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 3 மாணவர்கள் கைதான நிலையில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் கைது

3 மாணவர்கள் கைதான நிலையில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் கைது

3 மாணவர்கள் கைதான நிலையில் தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள் கைது | student sex case | hm, 2 teachers arrested | attur | salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் பாலியல் தொந்தரவு செய்தனர். இதுகுறித்து குழந்தைகள் ஹெல்ப்லைன் 1098 எண்ணிற்கு மாணவி புகார் கூறினார். இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் மாணவி மற்றும் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். மூன்று மாணவர்கள் மாணவிக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதில் மாணவர் மூவரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட் உத்தரவுப்படி மூவரும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை மறைத்ததாக தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியை பானுப்பிரியா ஆகியோரையும் தற்போது ஆத்தூர் மகளிர் போலீசாரால் கைது செய்தனர்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை