உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / போலீஸ் பலத்த பாதுகாப்புடன் டாஸ்மாக் திறப்பு | Tasmak shop open issue | Attur

போலீஸ் பலத்த பாதுகாப்புடன் டாஸ்மாக் திறப்பு | Tasmak shop open issue | Attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்வராயன்மலையில் மேல்நாடு, கீழ்நாடு, வடக்குநாடு, தெற்குநாடு ஆகிய நான்கு ஊராட்சிகளில் 120க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் வடக்குநாடு ஊராட்சி கருமந்துறை, சேர்வாய்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கூடாது எனக்கூறி கருமந்துறை போலீஸ் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தாரிடம் மனு அளித்தனர். அதை பொருட்படுத்தாமல் ஆட்டோவில் மதுபான பாட்டில்களை எடுத்து வந்து கடையில் இறக்கி மாலை 4 மணிக்கு மேல் டாஸ்மாக் கடையை திறந்தனர். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போலீசார் கண்டுகொள்ளாமல் கடையை நடத்த பாதுகாப்பில் இருந்தனர். போலீசாரை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி கடை முன் மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த தாசில்தார் ஜெயக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் கடையை திறப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபாட்டில் நல்ல சாராயமா? பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கடையை திருந்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை