ஸ்ரீநிர்வாண தேசிக சந்நியாசி வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டக் கொடியேற்றம்
ஸ்ரீநிர்வாண தேசிக சந்நியாசி வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டக் கொடியேற்றம் | temple festival | Attur | Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ நிர்வாண தேசிக சன்னியாசி வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது . இக்கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையையொட்டி திருத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தேர்த்திருவிழா வரும் 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். விழாவின் முதல் நாளான இன்று கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.