உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / முகமுடி அணிந்து பெற்றோரை தாக்கி காரில் கடத்தி சென்றதாக புகார் | Athur | Woman escapes with trainer

முகமுடி அணிந்து பெற்றோரை தாக்கி காரில் கடத்தி சென்றதாக புகார் | Athur | Woman escapes with trainer

வள்ளி கும்மி ஆட்ட காதல் பயிற்சியாளருடன் பெண் எஸ்கேப் டிஸ்க்: முகமுடி அணிந்து பெற்றோரை தாக்கி காரில் கடத்தி சென்றதாக புகார் / Athur / Woman escapes with trainer சேலம் மாவட்டம் தலைவாசல் தென்குமரையை சேர்ந்தவர் அருண். கொங்கு வள்ளி கும்மி ஆட்ட பயிற்சியாளர். கெங்கவல்லி நடுவலூரில், 6 மாதத்திற்கு முன் கோயில் திருவிழாவில் நடந்த வள்ளி கும்மி ஆட்டத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிவேதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் ஏற்பாடு நடந்தது. நிவேதாவை அவரது வீட்டில் இருந்து காரில் சிலர் முகமுடி அணிந்து கடத்திச் சென்றதாகவும், தடுக்க முயன்ற அவரது தாயை தாக்கியதாக அருண் உட்பட 5 பேர் மீது கெங்கவல்லி போலீசில் புகார் கூறினர். இந்நிலையில் அருண் நிவேதா வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோயிலில் திருமணம் செய்து சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆத்தூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெண்ணின் தரப்பு திருமணத்தை ஏற்க மறுத்து வெளியேறினர். தன்னை யாரும் கடத்திவில்லை விரும்பி சென்றதாக நிவேதா விடியோ வெளியிட்டார். கெங்கவல்லி போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ