/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ஆத்தூர் தங்க மங்கைக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு | wrestling competition | wrestling champion
ஆத்தூர் தங்க மங்கைக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு | wrestling competition | wrestling champion
சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரத்தை சேர்ந்த தொழிலாளி ராஜா மகள் ஜமுனா. அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறாள். சிலம்பம், வாள் வீச்சு, மல்யுத்த வீராங்கனை. பிப்ரவரி 1 முதல் 4 வரை ஹைதராபாத்தில் நடந்த தேசிய பட்டய மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய ஜமுனாவுக்கு ஊர் மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிப் 09, 2024