/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ 53 ஜோடி மாட்டு வண்டி காளைகள் சீறிப்பாய்ந்தன | Sivagangai | Bullock Cart Racing
53 ஜோடி மாட்டு வண்டி காளைகள் சீறிப்பாய்ந்தன | Sivagangai | Bullock Cart Racing
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அ.காளாப்பூரில் புத்தாண்டை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் திண்டுக்கல் காரைக்குடி ரோட்டில் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, ராமநாதபுரம், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 53 ஜோடி மாட்டுவண்டிகள் சீறிப்பாய்ந்தன. பெரிய மாடு 8 மைல் தூரமும், கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, 6 மைல் தூரமும் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் திரளான பொதுமக்கள் ரசித்தனர்.
ஜன 01, 2024