உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை திமுக கான்ட்ராக்டர் முருகனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் | Attempted assault on female

சிவகங்கை திமுக கான்ட்ராக்டர் முருகனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் | Attempted assault on female

சிவகங்கை திமுக கான்ட்ராக்டர் முருகனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் | Attempted assault on female officer | Sivagangai சிவகங்கையை சேர்ந்தவர் முருகன். இவர் திமுக மாவட்ட தொழிலாளர் அணி தலைவர். திமுகவை சேர்ந்த இவரது மனைவி ஹேமலதா. இவர் கோவானுார் ஊராட்சி தலைவர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகளை சப் கான்ட்ராக்ட் அடிப்படையில் மேற்கொண்டார். இவரது பணிகள் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது. எனினும் அரைகுறையாக பணிகளை முடித்து அதற்கான தொகையை வழங்கும்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியை கான்ட்ராக்டர் முருகன் அணுகினார். பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். அதில் திருப்தி ஏற்பட்டால் வேலையை எடுத்த கான்ட்ராக்டர் பெயருக்கு தொகை வழங்கப்படும் என உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரி கூறினார். கொதிப்படைந்த முருகன் பெண் அதிகாரி எனக்கூட பார்க்காமல் வாக்குவாத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இரும்பு சேரை எடுத்து அதிகாரியை தாக்க முயன்றார். அலுவலக ஊழியர்கள் முருகனை தடுத்து வெளியே அழைத்து வந்தனர். அதிர்ச்சியடைந்த உதவி பொறியாளர் செய்வதறியாது திகைத்தார். அரசு அலுவலகத்தில் புகுந்து பெண் அதிகாரியை தாக்க முயன்ற முருகனை கைது செய்யக்கோரி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அனைத்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ