உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / பறவைகள் வரவால் அதிக மழை பெய்யும் வாய்ப்பு | foreign birds flock to vetta gudi Bird sanctuary

பறவைகள் வரவால் அதிக மழை பெய்யும் வாய்ப்பு | foreign birds flock to vetta gudi Bird sanctuary

சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிப்பட்டி, சின்ன கொள்ளுக் குடிப்பட்டி, வேட்டங்குடி ஆகிய மூன்று கண் மாய்களில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 8,000க்கு மேற்பட்ட பறவைகள் வந்து செல்லும். இக்காலங்களில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். மீண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தன் இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்லும். பறவைகளுக்காக இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிப்பதில்லை. தென்மேற்கு பருவ மழை காலங்களில் மழை பெய்தால் சரணாலயம் முழுவதும் பறவைகள் ராஜியம் தான். சீசனையொட்டி சாம்பல் கூழைக்கடா, சின்ன சீழ்ரக்கை சிறகி, நீல சிறகி, நத்தை குத்தி நாரை, நாம கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட பலவகை பறவைகள் தற்போது சீசனுக்கு வந்துள்ளன. அக்டோபர் முதல் வாரத்தில் இன்னும் கூடுதலான பறவைகள் வருகை இருக்கும். இந்தாண்டு சீசனுக்கு பறவைகள் முன்கூட்டியே வந்துள்ளதால் அதிக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி