கார்த்தி எம்பி, முன்னாள் எம்பி சிதம்பரம் ஆய்வின் போது சலசலப்பு | No basic facilities | Sivngangai
கார்த்தி எம்பி, முன்னாள் எம்பி சிதம்பரம் ஆய்வின் போது சலசலப்பு | No basic facilities | Sivngangai | congress | Dmk லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக சிவகங்கை பஸ் ஸ்டாண்டை காங்கிரஸ் எம்பி கார்த்திக் மற்றும் அவரது தந்தையும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரம் ஆகியோர் ஆய்வு செய்ய வருவதாக நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். அப்போது அங்கிருந்த திமுக பிரமுகர் குமாரசாமி என்பவர் முதல்வர் ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு ஓட்டுப்போட்டோம். சிவகங்கை நகராட்சி நாறிக் கிடக்கிறது. இதுவரை என்ன செய்தீர்கள்? உங்களுக்கு ஓட்டுப்போட்டு என்ன பயன்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.