இரண்டாவது நாளாக நான்கு பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை| Lock-up death case | Sivaganga
இரண்டாவது நாளாக நான்கு பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை/ Lock-up death case / Sivaganga அஜித் குமார் கொலை வழக்கில் கோயில் காவலாளர்கள் பிரவீன், வினோத், ஆட்டோ டிரைவர் அருண் மற்றும் சிசிடிவி கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் நீதிபதி ஜான்சுந்தர்லால் நேற்று முதல் கட்ட விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கோயில் அறநிலையத்துறை அலுவலர் பெரியசாமி, வீடியோ பதிவு செய்த சக்தீஸ்வரன், கோயில் அலுவலர் பிரபு மற்றும் கார்த்திக் ராஜாவிடம் நீதிபதி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். இன்று காலை 8:45 மணிக்கு துவங்கிய விசாரணை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ADSP சுகுமாரன் மற்றும் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் இருந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பெறப்பட்டது.