உள்ளூர் திமுகவினரை விரட்டி வெளுத்த அமைச்சரின் ஆதரவாளர்கள் | Sivaganga | Police investigation
சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கார்த்திக் ஆதரவாக அமைச்சர் பெரியகருப்பன் எஸ்.புதூர் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டார். உரத்துப்பட்டிக்கு வந்த அமைச்சரை உள்ளூர் திமுகவினர் உள்ளிட்ட கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு உரத்துப்பட்டி டூ மேலவண்ணாரிருப்பு ரோடு போடும் பணி பல வருடங்களாக கிடப்பில் உள்ளது. அவ்வழியாக அமைச்சர் காரில் செல்லவேண்டும் அப்போது தான் நிலைமை அவருக்கு புரியும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சருடன் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். உள்ளூர் திமுக வினர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பா.ஜ ஒன்றிய தலைவர் செல்வராஜிடம் புகார் கூறினர். திமுக ஒன்றிய செயலாளர் காரை மறித்து தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பினார். அவரையும் அமைச்சரின் ஆதரவாளர்கள் விரட்டிச் சென்று தாக்கினர். அங்கிருந்தவர்கள் செல்வராஜை வீட்டுக்குள் பூட்டி பாதுகாத்தனர். ஆனாலும் வீட்டுக்குள் சென்ற கும்பல் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி மீத தாக்குதல் நடத்தியது. உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன், ராசு மற்றும் பா.ஜ நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் பொன்னமராவதி அரசு ஆஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். கிராம மக்கள் தங்களை தாக்கியதாக அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளர்களான விக்னேஷ் பிரபு, விஸ்வநாதன் ஆகியோரும் ஆஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.