உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / காவல் தெய்வம் பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

காவல் தெய்வம் பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

காவல் தெய்வம் பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு | unique pongal celebrations | sivagangai சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி கிராமத்தில் கீழத்தெரு, மேலத்தெரு மற்றும் சலுகைபுரம் பகுதி மக்கள் தங்களது காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். விவசாயம் செழிக்க, உலக நன்மை பெருக, மக்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்க வேண்டி மதகுபட்டி கிராம பெண்கள் ஆண்டு தோறும் மாட்டுப்பொங்கலன்று காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். இதற்காக பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து கோயில் வாசலில் பொங்கல் வைத்து வழிபடுவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டி வலம் வருவர். விழா முடிந்ததும் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்பர். இதில் கரும்பு மற்றும் எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அம்மன் எலுமிச்சை பழங்களை போட்டி போட்டுக்கொண்டு பலரும் ஏலம் எடுப்பர். எலுமிச்சை பழம் ஒன்று பல ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போவது வழக்கம். மதகுபட்டி கிராமத்தில் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல், ஒரே மாதிரியாக வெள்ளை சேலை, வெள்ளை ரவிக்கை அணிந்து பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக ஒரு மாதம் முன்பே பெண்கள் கடும் விரதம் இருந்து அம்மனை வழிபடுகின்றனர். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மதகுபட்டி காவல் தெய்வங்களான பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபடுவோம்; வாழ்வில் சகல நன்மைகளும் பெறுவோம்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை