வீடுகள் தோறும் தீப்பந்தம் | Sivaganga | village in darkness | Power cut
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழையவளவு கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த 24 ம் தேதி பெய்த கண மழையில் 4க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கிராமமே இருளில் முழ்கியது. 3 நாட்கள் ஆன நிலையில் மின்கம்பங்களை சரிசெய்யவில்லை. வீடுகளில் மெழுகுவர்த்தி மண்ணெண்ணெய் விளக்குகள் ஏற்றி இரவு பொழுதை கழிக்கின்றனர். மின்விசிறி இயங்காததால் குழந்தைகள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். மின் மோட்டார்களை இயக்க முடியாததால் தண்ணீருக்கு சிரமப்படுகின்றனர். இரவில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தீப்பந்தம் ஏந்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் சுணக்கம் இல்லாமல் பணிகளை விரைந்து செய்து மின் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.