மதுரை ஆதீனம் ஆசை seperate state for Tamils in srilanka
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் மறுநோக்கிய பூங்குழலி அம்மன் கோயில் உள்ளது. இங்கு சுதந்திரப் போராட்ட வீரர் துப்பாக்கி கவுண்டர் என்ற உதயப்பெருமாள் கவுண்டருக்கு சிலை உள்ளது. மருது பாண்டியர் படையில் துப்பாக்கிப் பிரிவு தலைவராக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் உதயப்பெருமாள் கவுண்டர் . துப்பாக்கி கவுண்டர் மறைந்த அக்டோபர் 5ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி துப்பாக்கி கவுண்டரின் வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் சிலையை வணங்கி வழிபட்டனர். நினைவேந்தலில் மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிஹர தேசிக பரமாச்சாரி சுவாமிகள் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அக் 05, 2024