யாருமே இல்லாத டீக்கடையில் டீ ஆத்தும் முதியவர் ‛திக் திக்'|Serial Murders| Nattagudi | Sivagangai
சிவகங்கை மாவட்டம் மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி கிராமம். இங்கு ஐந்து தலைமுறையாக ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்தனர். இக்கிராமம் தோன்றிய காலம் முதல் குடிநீர், சுகாதார வளாகம், தெருவிளக்கு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எள் முனையளவு கூட இங்கில்லை. அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கேட்டும் பயனில்லை. பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் விடிவு பிறக்கவில்லை. இதனால் கிராம மக்கள் நொந்து போனது தான் மிச்சம். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக கிராம மக்கள் படிப்படியாக வெளியேறினர். சமீப காலமாக 2 இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என 50 பேர் மட்டுமே வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பவர் 4ம் தேதி அதிமுக கிளை செயலாளர் கணேசன் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கடந்த ஜூலை 20ம் தேதி விவசாயி சோணைமுத்து என்பவர் தலையை துண்டித்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இரண்டு படுகொலை சம்பவங்கள் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. திடீரென கிராமத்தில் வசித்த கொஞ்சப் பேரும் உயிருக்கு பயந்து ஒரே நாள் இரவில் கூண்டோடு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர்.