மகள்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி ஆனந்தம் | Sivagangai | Record made by crafting a Pongal pot, stove
மகள்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி ஆனந்தம் | Sivagangai | Record made by crafting a Pongal pot, stove, and sugarcane using 12 grams of silver சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வாரியார் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் அவரது சகோதரர் பாண்டியன். இருவரும் நகை தொழில் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பண்டிகைக்கும் வெள்ளியால் வித்தியாசமான பொருள்களை செய்வது இவர்களுக்கு வாடிக்கை. இந்தாண்டு தைப்பொங்கலுக்கு 12 கிராம் எடையில் வெள்ளியால் 2 பொங்கல் பானை, 2 கரண்டி, 2 அடுப்பு, 2 கரும்பு, 8 விறகுகள் உள்ளிட்ட பொருட்களை இருவரும் தங்களது மகள்களுக்கு பொங்கல் சீதனமாக வழங்கினர். நகைகளை கையால் செய்யும் தொழிலாளர்கள் நழிவடைந்து வருவதை சுட்டிக்காட்டவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.