உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / 200 க்கும் மேற்பட்ட காளைகள், 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு | Sivaganga | Manjuvirattu

200 க்கும் மேற்பட்ட காளைகள், 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு | Sivaganga | Manjuvirattu

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டியில் விவசாயம் செழித்து அறுவடைகள் முடிந்த பிறகு உச்சி கருப்பர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தை படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 200 க்கும் மேற்பட்ட காளைகள் சீறீப்பாய்ந்தன. மதுரை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் இருந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகள் கட்டுமாடுகளாக வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். சிறந்த காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா, பீரோ கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சு விரட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ