ரேசன் கடை கேட்டவருக்கு பரிட்சை எழுத ஐடியா கொடுத்த அதிகாரிங்க | Sivagangai | ration shop
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் MA படிச்சுட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். திருமாஞ்சோலையில் கடந்த 31ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. மாரிமுத்து எங்க ஊருக்கு ரேஷன் கடை இல்ல, பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என மனு கொடுத்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி அரசு சார்பில் மாரிமுத்துவுக்கு கடிதம் வந்தது. அரசு சார்பில வந்த கடிதத்தை பிடிச்சு பார்த்து அதிர்ச்சி அடைஞ்சுட்டாரு. அதிகாரிங்க அனுப்பிய கடிதத்தில் நீங்க ரேஷன் கடையில வேலை கேட்டு மனு கொடுத்து இருக்கீங்க உங்க மனு பரிசளிக்கப்பட்டது. நீங்க தேர்வு எழுதி தேர்வில் பாஸ் செஞ்சீங்கன்னா உங்களுக்கு கட்டாயம் ரேஷன் கடையில் வேலை கிடைக்கும் என பதில் கொடுத்திருந்தாங்க. ஷாக்கான மாரிமுத்து கலெக்டர் அலுவலகத்தில் சரியான விளக்கம் வேண்டும் இன்னிக்கு மனு கொடுத்தாரு. அதிகாரிங்களோட செயல நினைத்து நொந்து போயி , இப்ப கொடுத்த மனுவுக்காவது சரியான பதில் குடுங்க சார் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.