உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / கண்டித்து தாய், மகள் தற்கொலை முயற்சி | Sivagangai Crime

கண்டித்து தாய், மகள் தற்கொலை முயற்சி | Sivagangai Crime

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ உ சி ரோட்டை சேர்ந்தவர் சேட்டு. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரிதா, மகன்கள் குணா வயது 22, மனோஜ் குமார் வயது 18 மற்றும் மகள் மகாலட்சுமி வயது 23 உள்ளனர். குணா. மனோஜ்குமார் ஆகியோர் முன்பு கஞ்சா வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. இருவரையும் போலீசார் கஞ்சா வழக்கில் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம். தற்போது மனம் திருந்திய சகோதரர்கள் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். எனினும் சகோதரர்களை மீண்டும் மீண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதை போலீசார் வழக்கமாக கொண்டுள்ளனர். போலீசாரை கண்டித்து சரிதா, மகாலட்சுமி ஆகியோர் சிவகங்கை கலெக்டர் ஆபீஸ் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர். தாயும், மகளும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கலெக்டர் ஆபீஸில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ