/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ செண்டை மேளத்துடன் ஆடி பாடி சென்ற பக்தர்கள் | Temple Festival | Manamadurai
செண்டை மேளத்துடன் ஆடி பாடி சென்ற பக்தர்கள் | Temple Festival | Manamadurai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில். இக்கிராம மக்கள் சார்பாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி புரவி எடுப்பு விழா நடத்தினர். விழவையொட்டி செண்டை மேளம், டிரம்ஸ் வாத்தியங்கள் முழுங்க பக்தர்கள் ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்தனர். அங்கு தயார் நிலையில் செய்து வைக்கப்பட்டிருந்த புரவிகளுக்கும் பொம்மைகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து புரவிகள் ஊர்வலமாக நிறைகுளத்து அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்று சுவாமியை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன் 25, 2024