விநாயகர் சதுர்த்தி தேரோட்டம் | Temple Festival | Pillaiyarpatti
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் வாகன வீதி உலாவும் நடக்கிறது. ஒன்பதாம் விழாவான இன்று காலை கற்பக விநாயகரும், சண்டிகேஸ்வரரும் அலங்காரத் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை தேர் வடம் பிடித்து தேரோட்டம் வெகு சிறப்பாக துவங்கியது. பெண்கள், சிறுவர், சிறுமியர் உற்சாகமாக சண்டிகேஸ்வரர் தேரை வடம் பிடித்தனர். தேர்கள் கோயிலை வலம் வந்தன. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
செப் 06, 2024