பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் | Temple Festival | Sivagangai
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட கொடி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை, மாலை என இரு வேளையும் உற்சவ விநாயகர் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் 6ம் நாள் மாலை கஜமுக சூரசம்ஹாரம், 9ம் நாள் விழாவில் தேரோட்டம், 10 மற்றும் விநாயகர் சதுர்த்தி அன்று தீர்த்தவாரி உற்சவம், மூக்கூரணி மோதகம் படையல் உள்ளிட்டவை நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.