உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / வழிநெடுகிலும் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு|Thaipusam

வழிநெடுகிலும் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு|Thaipusam

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரத்தார்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தைப்பூசத்திற்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக பழநி செல்கின்றனர். 45 நகரத்தார் காவடிகளும் ஒரு முதலியார் கட்டளை காவடியும் தேவகோட்டை நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் வழியாக பழநிக்கு ஆன்மிக யாத்திரை புறப்பட்டனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் காவடிக்கு மாலை அணிவித்து, வேலுக்கு பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்து தடபுடலாக வழியனுப்பி வைத்தனர்.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !