மணல் மாபியா கும்பல் எஸ்கேப் | Sivaganga | Tipper lorry, JCB seized
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மணிமுத்தாறில் மணல் கடத்தப்படுவதாக தேவகோட்டை தாலுகா போலீசருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மணிமுத்தாறில் ஜேசிபி இயந்திரம் மூலம் 3 டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். மணல் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்ற போது ஜேசிபி எந்திரம் மற்றும் 3 டிப்பர் லாரிகளை நிறுத்திவிட்டு கும்பல் ஓட்டம் பிடித்தது. 3 டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடுகின்றனர்.
ஏப் 18, 2024