உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / பங்குனி சுவாதி திருவிழா பூப்பல்லாக்கு நாளை நடைபெறும்| Vettudaiyar kaliamman temple Car festival

பங்குனி சுவாதி திருவிழா பூப்பல்லாக்கு நாளை நடைபெறும்| Vettudaiyar kaliamman temple Car festival

வெட்டுடையார் காளியம்மன் கோயில் தேரோட்டம் Desc : பங்குனி சுவாதி திருவிழா பூப்பல்லாக்கு நாளை நடைபெறும்/ Vettudaiyar kaliamman temple Car festival/ Sivagangai சிவகங்கை வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி சுவாதி திருவிழா மார்ச் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான பூப்பல்லாக்கு நாளை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ