உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / லஞ்சத்தை தவணை முறையில் கேட்டு விவசாயிக்கு டார்ச்சர் | Tenkasi | 5 thousand bribe for land survey RI

லஞ்சத்தை தவணை முறையில் கேட்டு விவசாயிக்கு டார்ச்சர் | Tenkasi | 5 thousand bribe for land survey RI

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையை சேர்ந்த விவசாயி கதிரேசன். நிலத்திற்கு தரிசு நிலச் சான்று பெறுவதற்காக மத்தளம் பாறை விஏஓவை அனுகினார். அவர் ஆர்ஐ தர்மராஜை பார்க்கும் படி பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து ஆர்ஐ அலுவலகத்தில் ஆர்ஐ தர்மராஜை சந்தித்தார். அவர் நிலத்தை அளவீடு செய்ய 20,000 ரூபாய் கேட்டார். விவசாயி கதிரேசன் பேரம் பேசி 5,000 ரூபாய் முதல் தவணையாக தருவதாக ஒப்புக்கொண்டார். லஞ்சம் தர விரும்பாத கதிரேசன் லஞ்ச ஒழிப்பு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால்சுதரிடம் புகார் கூறினார். இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை கதிரேசன் ஆர்ஐ தர்மராஜிடம் கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை