பாஜக மற்றும் ஹிந்து முன்னணியினர் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் கைது
பாஜக மற்றும் ஹிந்து முன்னணியினர் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் கைது | BJP, Hindu Munnani executives arrestd | tenkasi மதுரை திருப்பரங்குன்றம் கோயில் முன்பு இன்று நடக்கயிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மற்றும் ஹிந்து முன்னணியினர் தென்காசி ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். தாங்கள் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு செல்வதாக பாஜக தென்காசி கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் ஹிந்து முன்னணி மாவட்ட துணை செயலாளர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் நீங்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் செல்ல உள்ளதாக எனக்கு தகவல் வந்துள்ளது, எனக்கூறி 21 பேரை கைது செய்தார். இதைக் கண்டித்தும், திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்ட நவாஸ்கனி எம்பி மற்றும் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.