உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / குற்றாலத்தில் குவிந்த பெண் பக்தர்கள் | Tenkasi | Courtalam 5 falls | Sumangali Pooja

குற்றாலத்தில் குவிந்த பெண் பக்தர்கள் | Tenkasi | Courtalam 5 falls | Sumangali Pooja

கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தினர். கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டியும், குடும்பம் சுபிட்சமாக வாழ வேண்டியும் அதிகாலையிலே ஏராளமான பெண்கள் புலியருவி, ஐந்தருவிகளில் நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். திருமாங்கல்யத்திற்கு குங்குமமிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். கன்னி விநாயகர் கோயில், செண்பக விநாயகர் கோயிலை 11 முறை வலம் வந்து, நாகர் சிலைக்கு பூ, பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ