உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / கட்டிங், கமிஷன் பார்த்தாச்சு; குடிநீர் திட்டம் போயாச்சு | ₹85 crore drinking water project wasted

கட்டிங், கமிஷன் பார்த்தாச்சு; குடிநீர் திட்டம் போயாச்சு | ₹85 crore drinking water project wasted

கட்டிங், கமிஷன் பார்த்தாச்சு; குடிநீர் திட்டம் போயாச்சு | ₹85 crore | Thenkasi drinking water project wasted தென்காசி மாவட்டம் வடகரை, அச்சன்புதூர் மற்றும் பண்பொழி பேரூராட்சி பகுதியில் மத்திய அரசு பங்களிப்புடன் அம்ருத் குடிநீர் திட்டம் 85 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக அடவி நாயனார் கோயில் அணையின் மிக அருகில் ஐந்து உரை கிணறுகள் தோண்டப்பட்டன. கிணறு தோண்டும் போது சுமார் 5 அடி ஆழத்திலேயே பாறைகள் தென்பட்டன. தொடர்ந்து பாறைகளை தகர்க்க வெடி வைக்க முயற்சி செய்தனர். அணை அருகில் உள்ளதால் வெடிவைத்து பாறைகளை தகர்த்தால் அணைக்கு ஆபத்து ஏற்படும் என PWD அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிணறு வெட்டும் முயற்சியை கைவிடப்பட்டது. குடிநீர் திட்டப்பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் மக்கள் வரிப்பணம் 85 கோடி ரூபாய் வீணாகி வருவதாக வடகரை காந்தியவாதி வாவா மைதீன் குற்றம் சுமத்தினார்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ