துரியன் எங்கே? அலைப்பாயும் மனசு | Durian fruit that gives birth to a child | coutralam
குழந்தை வரம் தரும் ‛துரியன் குற்றாலம் ‛குளுகுளு பழங்கள் டிஸ்க்:துரியன் எங்கே? அலைப்பாயும் மனசு | Durian fruit that gives birth to a child | coutralam தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் கலை கட்டும். இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது துவங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் நேரங்களில் மட்டுமே குற்றாலம் மற்றும் கேரளாவில் விளையும் அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், முட்டைப் பழம், துரியன், ஸ்டார் உள்ளிட்ட பழங்கள் குற்றாலம் வல்லம் பழ குடோன்களில் விற்பனைக்காக அதிக அளவில் வர துவங்கியுள்ளது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் மலைகளில் மட்டுமே விளையும் அரிய வகை பழங்களின் விற்பனை ஜோராக நடக்கிறது. குற்றாலம் பகுதியில் உள்ள பழக் கடைகளில் ரம்டான், மங்குஸ்தான், முட்டைப்பழம், துரியன், கேரள பேரிச்சம்பழம், வால் பேரிக்காய், ஆப்பிள் பூசணி, ஸ்டார் புரூட், சாக்லேட் பூசணி, அவகோடா உள்ளிட்ட அரிய வகை பழ வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. துரியன் பழத்தை குழந்தை இல்லாத நபர்கள் சாப்பிட்டால் விரைவில் குழந்தை பேரு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குற்றாலத்தில் குவிந்துள்ள அரிய வகை பழங்களை டூரிஸ்ட்டுகள் ஆசை ஆசைய் கூடை கூடையாய் வாங்கி செல்கின்றனர். பழங்கள் வரத்து மற்றும் விற்பனை ஜோராக இருப்பதால் பழ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.