தமிழக - கேரளா எல்லையில் துயர சம்பவம் | Gang kills worker by pushing him off a moving train | Tenkasi
தமிழக - கேரளா எல்லையில் துயர சம்பவம் / Gang kills worker by pushing him off a moving train / Tenkasi தமிழக - கேரள எல்லை செங்கோட்டை அடுத்த புனலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. ரயிலின் பொதுப்பெட்டியில் பயணம் செய்த பயணியை ஒரு கும்பல் கீழே தள்ளிவிட்டு படுகொலை செய்தது. ஸ்பாட்டிற்கு விரைந்த புனலுார் ரயில்வே போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புனலூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ரயில் பயணிகளிடம் இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் கேரள மாநிலம் செங்கனூர் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் விடுமுறைக்காக தனது ஊருக்கு பாலருவி எக்ஸ்பிரஸில் பொதுப்பெட்டியில் இன்று பயணம் செய்தார். தமிழக கேரளா எல்லையான ஆரியங்காவு பகுதியை கடந்து புனலூர் அருகே ரயில் சென்றது. அப்போது தென்காசியை சேர்ந்த ஏழு பேர் கும்பல் அவருடன் அதே பெட்டியில் பயணம் செய்தனர். அந்த கும்பலுக்கும் செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இக்கொலை குறித்து 7 பேர் கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.