ஆஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாட்டிலிருந்து மரங்கள் தேர்வு | Tenkasi | Kashi Vishwanath Temple
தென்காசி காசி விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கொடி மரங்களுக்கு புதிய மரங்கள் நடப்பட உள்ளது. சுவாமி சன்னதி கொடிமரம் தொழிலதிபர்கள் அழகராஜா, அம்மன் சன்னதிக்கு வெங்கடேஷ் ராஜா ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூகினியா நாட்டிலிருந்து நேர்த்தியான இரண்டு வேங்கை மரங்களை தேர்வு செய்து தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக கப்பலில் கொண்டு வந்தனர். சுவாமி சன்னதிக்கு 45 அடி நீள கொடி மரமும் அம்மன் சன்னதிக்கு 38 அடி நீள கொடிமரமும் செயல் அலுவலர் முருகன் தலைமையில் தொழிலதிபர்கள் அழகர்ராஜா வெங்கடேஷ் ராஜா ஆகியோர் முன்னிலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. கொடி மரங்கள் கோயிலுக்கு கொண்டு வந்த போது பக்தர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.