உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / மெகா குழப்பத்தால் 16வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு | Courtralam Falls Damage | Who will fix it?

மெகா குழப்பத்தால் 16வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு | Courtralam Falls Damage | Who will fix it?

தென்காசி மாவட்டத்தில் கடந்த 13ம் தேதி பெய்த தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஒரு வார காலத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 16 நாட்கள் கடந்தும் இதுவரை பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கால் தடுப்பு கம்பிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. இந்த வெள்ள சேதங்களை பொதுப்பணித்துறை, வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. வெள்ள சேதங்களை விவசாய சங்கங்கள் சார்பில் பார்வையிட்டனர். பழைய குற்றாலத்தில் இரண்டு நாளில் சரி செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ