உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் வேதனை | silk production is down | 4th place in tamilnadu

பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் வேதனை | silk production is down | 4th place in tamilnadu

தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்கம் சார்பில் பட்டுக்கூடு உற்பத்தி குறைவாக உள்ள காலங்களில் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தென்காசி நன்னகரம் அங்காடியில் பட்டு விவசாயிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் நூற்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான முட்டை மற்றும் தரமான இளம் புழுக்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 2023 - 24ம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி நன்னகரம் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் அருண் சங்கர் தலைமையில் கவன ஈர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !