விவசாய மின் இணைப்பிற்கு ₹35,000 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
விவசாய மின் இணைப்பிற்கு ₹35,000 லஞ்சம் கேட்ட அதிகாரிகள் | Tenkasi | bribe for agriculture power connection தென்காசி மாவட்டம் சிவகிரி தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் வண்டிக்கார மாரிமுத்து. இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். சிவகிரி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரை அணுகினார். நிலத்தை பார்வையிட்ட முத்துக்குமார், ஃபோர்மேன் மருதுபாண்டி ஆகியோர் கட்டணமாக 16 ஆயிரத்து 499 ரூபாய் செலுத்த வேண்டும். தங்களுக்கு லஞ்சமாக 35 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கண்டிஷன் போட்டனர். அவ்வளவு பணம் மொத்தமாக தர வாய்ப்பில்லை என மாரிமுத்து தெரிவித்தார். முதல் கட்டமாக 5 ஆயிரம் தாருங்கள். பிறகு 2 தவணைகளில் தலா 15 ஆயிரம் வீதம் தாருங்கள் என்றார். லஞ்சம் தர விரும்பாத மாரிமுத்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி பால்சுதாகர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, எஸ்.ஐ. ரவி மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை முத்துக்குமார், மருதுபாண்டி ஆகியோரிடம் மாரிமுத்து கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களது வீடுகளிலும் ரெய்டு நடந்தது.