உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பெண் பக்தர்கள் நடத்திய கும்பாபிஷேகம் | aadishakti kumbhabhishekam according to Tamil rituals

பெண் பக்தர்கள் நடத்திய கும்பாபிஷேகம் | aadishakti kumbhabhishekam according to Tamil rituals

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனத்தில் இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் தமிழ் சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞான பீடம் உள்ளது. இந்த ஞான பீடத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக பச்சை உடை அணிந்த 60 பெண் பக்தர்கள் யாகசாலை பூஜைகள் நடத்தி கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர். தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் மற்றும் கோவை காமாட்சிபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பெண் பக்தர்கள் கருவறைக்கு சென்று சாமிகளுக்கு அபிேஷகம் செய்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை