/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஏராளமானோர் தீமிதித்து சுவாமி தரிசனம் | Draupathiamman Temple Thimithi Festival
ஏராளமானோர் தீமிதித்து சுவாமி தரிசனம் | Draupathiamman Temple Thimithi Festival
தஞ்சையை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் திரெளபதையம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தீமிதி திருவிழா 6ம் தேதி மகாபாரத கதையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நேற்று இரவு நடைப்பெற்றது. உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக தீ குண்டம் முன்பு வரப்பட்டனர். பின்னர் பெண்கள். சிறுவர்கள் என ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். ஏராளமானோர் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
மே 28, 2024