திரளான பக்தர்கள் தரிசனம் | Kaliamman Temple Kumbabhishekam
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஸ்ரீ வீர மகா காளியம்மன், அருள்மிகு மகிஷாசூரவர்த்தினி கோயில் உள்ளது. இங்கு கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் முடிந்து வீர மகா காளியம்மன், மகிஷாசூரவர்த்தினி மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஏப் 05, 2024