உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / இன்ஸ்பெக்டரின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு | library in police station

இன்ஸ்பெக்டரின் முயற்சிக்கு மக்கள் பாராட்டு | library in police station

தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரமேஷ் (50) இவர் தமிழகத்தில் முதன்முறையாக தான் பணிபுரியும் போலீஸ் நிலையத்தில் அறிவகம் என்ற பெயரில் நூலகம் அமைத்து உயர் அலுவலர்கள், சக போலீசார் மற்றும் பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். போலீஸ் நிலைய வளாகத்தில் மேற்கூரை அமைத்து, நூலகத்தை தொடங்கி அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்துறை நுால்களை அமைத்துள்ளார். போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தை இன்ஸ்பெக்டர் ரமேஷ் உருவாக்கியுள்ளார். நூலகத்தை தஞ்சை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். போலீஸ் நிலையம் வரும் மக்களை வரவேற்று, அவர்களுக்கு அழியாத செல்வம் கல்வி ஒன்றே என அச்சிடப்பட்ட பேனாவும், கல்வி கரையிலா கற்பவர் நாள் சில என அச்சிடப்பட்ட பைலும், தனது சொந்த செலவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழங்கி வருகிறார்.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை