/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது | Maha Varagi Amman festival | Great Temple | Thanjovur
மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது | Maha Varagi Amman festival | Great Temple | Thanjovur
தஞ்சை பெரியகோயில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் தனிசன்னதியில் மஹாவாராஹி அம்மன் எழுந்தருளியுள்ளார். அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், இவ்விழா மஹா கணபதி ஹோமத்துடன் இன்று துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மனுக்கு தினமும் அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும், விழாவையொட்டி தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொண்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பிரசாகதம் வழங்கப்பட்டது.
ஜூலை 05, 2024