போலிகளை தடுக்க வந்தாச்சு லோகோ | Manapparai Murukku | GI Tags | special logo | Tanjavur
போலிகளை தடுக்க வந்தாச்சு ‛லோகோ | Manapparai Murukku | GI Tags | special logo | Tanjavur ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். ஊரு பேர சொன்னாலே, அந்த ஸ்பெஷாலிட்டி தான் ஞாபகத்துக்கு வரும் . இப்போ மதுரைனா மணக்குற மல்லிகையும், திருநெல்வேலினா இனிக்கிற அல்வாவும் தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். அந்த லிஸ்ட்ல, மணப்பாறை மொறு மொறு முறுக்கு எப்பவுமே ஃபேமஸ் தான். இப்படி ஒவ்வொரு ஊர்லயும் இருக்குற தனித்துவம் வாய்ந்த பொருளை கண்டுபிடிச்சு, இந்திய அரசாங்கம் அதுக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பாங்க. அதுதான் புவிசார் குறியீடு. ஒரு குறிப்பிட்ட புவியியல் சார்ந்த இடத்துல கிடைக்கிற, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கிறது வழக்கம். இந்தக் குறியீடு, அந்த பொருட்களோட பாரம்பரிய உற்பத்தி முறை மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும். இந்தியால முதல் முதலா 2005ம் வருஷம், டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுச்சு. தமிழ்நாட்டுல முதன் முதலா புவிசார் குறியீடு வாங்குனது நம்ம காஞ்சிபுரம் பட்டு தான். 2005ல இருந்து இன்னைக்கு வரைக்கும் இந்தியாவில சுமார் 700 பொருட்களுக்கும், அதுல குறிப்பா தமிழ்நாட்டுல சுமார் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைச்சிருக்கு. புவிசார் குறியீடு கொடுக்கிறதால ஒரு தனிப்பட்ட பொருளுக்கு அங்கீகாரம் கிடைக்குது. புவிசார் குறியீடு இருக்கிற பொருட்களுக்கு சர்வதேச சந்தையில நல்ல மதிப்பு உண்டு. இதனால உற்பத்தியும் வருமானமும் அதிகமாகும். நம்ம திருச்சி மணப்பாறை முறுக்குக்கு 2023ம் வருஷம் புவிசார் குறியீடு கிடைச்சுச்சு. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கிறது தொழிலாளிங்களுக்கு வியாபாரம் செய்ய ரொம்பவே உதவும். ஆனா இதுல இருக்குற பிரச்சனை என்னன்னா, ஏகப்பட்ட போலி விற்பனையாளருங்க புவிசார் குறியீட்ட தப்பா பயன்படுத்துறாங்க. இது சட்டப்படி தப்பு. ஆனாலும் வணிக ரீதியா போட்டி போட்டு அவங்க பொருள விக்கிறாங்க. அத தடுக்குற விதமா, இன்னைக்கு தஞ்சாவூர்ல மணப்பாறை முறுக்குக்கான தனி லோகோ வெளியிடப்பட்டிருக்கு. நம்ம ஊருல ஒரு பொருள் ஸ்பெஷல்னா அது நமக்கே பெருமைதான். பாரம்பரியமும் தனித்துவமும் இருக்குற எத்தனையோ பொருள் முறையா அங்கீகாரம் இல்லாம, அந்த தொழிலே அழிஞ்சு போயிடுது. அப்படி இல்லாம, ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம், முத்துப்பேட்டை சுங்கட்டி மீன், தஞ்சாவூர் பொம்மை, சுவாமிமலை வெண்கல சிலைனு ஏகப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பொருள் நம்ம தமிழ்நாட்டுல இருக்கு. நம்ம ஊரு, நம்ம பெருமைனு கம்பளி போர்வைல ஆரம்பிச்சு கைத்தறி பொருள் வர எல்லாமே இங்க இருக்கு. ‛கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாருகொல்லுவோம்னு அன்று பாரதியார் சொன்ன தத்துவம், உண்மையான பொருட்களை தரமா தயாரிச்சு உலகத்துக்கு கொடுக்க வேண்டியது நம்ம கடமை.