/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது| mukkodi theppa festival| Kumbakonam
கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது| mukkodi theppa festival| Kumbakonam
கும்பகோணம் நாச்சியார் கோயிலில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயில், கல் கருட தலமாக விளங்குகிறது கோயிலில் மார்கழி மாத முக்கோடி தெப்ப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவர் சீனிவாச பெருமாள் மற்றும் வஞ்சுளவள்ளி தாயாருக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. கருட உருவம் வரையப்பட்ட கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. மேளதாளத்துடன் வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர். மகா தீபாராதனை காட்டப்பட்டது. வரும் 11ஆம் தேதி வசந்த மண்டபத்தில் தெப்ப திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்
ஜன 03, 2025