வீரர்களுக்கு பாஜ மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் பாராட்டு
வீரர்களுக்கு பாஜ மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் பாராட்டு | Thanjavur | National Karate Championship டில்லியில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது. 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழக அணி சார்பில் தஞ்சையில் இருந்து 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குமித்தே பிரிவில் 5 தங்கம் மற்றும் கட்டா பிரிவில் 4 வெள்ளி பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். தஞ்சை ரயில் நிலையம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாஜ மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சால்வை அணிவித்து பாராட்டினார். 5ம் வகுப்பு வரை கராத்தே பயிற்சியை பள்ளிகளில் கட்டாயப்பாடம் ஆக்க வேண்டும் என பயிற்சியாளர் அன்பரசன் வலியுறுத்தினார்.