/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ வ. உ.சி. பற்றி ராசா எம்பி பேச்சுக்கு வெள்ளாளர்கள் எதிர்ப்பு | Raja condemns Protest
வ. உ.சி. பற்றி ராசா எம்பி பேச்சுக்கு வெள்ளாளர்கள் எதிர்ப்பு | Raja condemns Protest
வ.உ. சிதம்பரம் தனது மகனுக்கு போலீஸ் வேலை வாங்கித் தரும்படி ஈ.வெ.ராவிடம் கேட்டதாக திமுக எம்பி ராசா சமீபத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் எம்ஜிஆரையும் ராசா சில நாட்களுக்கு முன் அவதுாறாக பேசினார். ராசாவின் அவதுாறு பேச்சை கண்டித்து அதிமுக உட்பட பல்வேறு அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் வ உ சி சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பிப் 10, 2024