கும்பகோணத்தில் உருவாக்கம் | former singapore PM Lee kuan yew, Raja Raja Cholan sculptures
கும்பகோணத்தில் உருவாக்கம் | former singapore PM Lee kuan yew, Raja Raja Cholan sculptures | Arrangement to establish in singapore தமிழக இளைஞர்கள் சிங்கப்பூரில் தொழில் முனைவராக முன்னேற்றம் காண அந்நாட்டு முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வாய்ப்பு அளித்தார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது முழு உருவச்சிலையை சிங்கப்பூரில் அமைக்க தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் வாழ் தொழிலதிபர் கருணாநிதி திட்டமிட்டார். சிலைகள் தயாரிப்பு பணியை சுவாமிமலை திருவலஞ்சுழி வேதா டெம்பிள் ஒர்க்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். ஸ்தபதி வினோத் தலைமையில் சிற்ப கலைஞர்கள் இரவு பகலாக சிலைகள் தயாரிப்பு பணி கடந்த 5 மாதங்களாக ஈடுபட்டனர். இதையடுத்து நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஏழு அடி உயர ஐம்பொன் ராஜராஜ சோழன் முழு உருவச் சிலை மற்றும் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆறடி உயர லீ குவான் யூ வெங்கல முழு உருவச் சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. இவற்றுடன் மரத்தினாலான தஞ்சை பெரிய கோயில் மினியேச்சர் ஒன்றும் தயாரானது. சிலைகளை பார்வையிட்ட தொழிலதிபர் கருணாநிதி சிற்பக் கலைஞர்களை பாராட்டினார். இந்த சிலைகள் மற்றும் மினியேச்சர் சென்னையில் இருந்து கப்பல் மூலம் சிங்கப்பூர் எடுத்து சென்று நிறுவப்படவுள்ளது.