திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Rajagopala Samy koil function
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடி உற்சவம் இன்று துவங்கியது. பச்சை நிற பட்டு வஸ்திரம் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோயிலில் உலா வந்தார். ஆழ்வார்கள் மற்றும் செங்கமலத்தாயார் சன்னதிகள் முன்பு தீட்சிதர்கள் பிரபந்த பாடல்களைப் பாடி பெருமாளை வரவேற்றனர். ராமர் சன்னதி, வைகுண்ட வாசல், வழியாக முத்தவெளிக்கு பெருமாள் எழுந்தருளினார் . அதைத்தொடர்ந்து மூலவர் பெருமாளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது.
ஜூலை 17, 2024