சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு
சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு தடபுடல் வரவேற்பு| National Tournament | Roller skating hockey| Gold medal| Tanjavur ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 63வது தேசிய ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி நடைபெற்றது. டிசம்பர் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை போட்டி நடந்தது. இதில் தமிழகம் பஞ்சாப் ஆந்திரா உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சேர்ந்த 120 அணிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து சுமார் 8 அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பயிற்சி பெற்ற தஞ்சாவூர் அணியினர் தங்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரர்களுக்கு இன்று தடபுடல் வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினர்